News January 8, 2025
புதுவையில் எச்எம்பிவி பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை எச்.எம்.பி.வி., பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. மாநிலத்தில் நிலவும் ஜலதோஷம், சுவாசநோய்த் தொற்றுக்களின் தரவுகளை ஆய்வு சுகாதாரத்துறை செய்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் இருமல் அல்லது தும்மும் போது கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் உங்கள் வாய் மற்றும் மூக்கை நன்றாக மூடவும் என தெரிவித்துள்ளது. ஷேர் செய்யவும்
Similar News
News January 28, 2026
புதுவை: ஒரே பதிவு எண் கொண்ட வாகனம் பறிமுதல்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்பவருக்குச் சொந்தமான ஒரு வாகனத்தின் பதிவு எண்ணிலேயே, மற்றொரு போலி வாகனம் இயங்குவதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்து, அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காரைக்கால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், அந்தப் போலி வாகனத்தைப் பறிமுதல் செய்து நகரப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 28, 2026
புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் கருத்தரங்ககம்

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவக் கருத்தரங்கு நடைபெற்றது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சென்னை தனியார் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் சஞ்ஜய் தியோடர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, செயற்கை இதய வால்வுகள் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து விரிவான சிறப்புரையாற்றினார். பல மருத்துவ நிபுணர்கள், மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
News January 28, 2026
புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <


