News January 8, 2025
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் SC சரமாரி கேள்வி

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாகத் தேசிய அளவிலான நிபுணர் குழு அமைக்காதது ஏன் என மத்திய அரசுக்கு SC கேள்வி எழுப்பியுள்ளது. அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க உத்தரவிடக் கோரிய கேரள அரசின் மனு மீதான விசாரணையின் போது, கடைசியாக எப்போது ஆய்வு நடத்தப்பட்டது எனக் கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரத்தில் TN அரசுக்கு ஆட்சேபனை உள்ளதா என்பதை அறிய விரும்புவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.
Similar News
News January 18, 2026
டிரம்ப்புக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு!

காசாவை நிர்வகிக்க டிரம்ப் அமைத்துள்ள <<18870153>>அமைதி வாரியத்திற்கு<<>> இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த குழுவை அறிவிக்கும் முன் USA தங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், தங்கள் கொள்கைகளுக்கு இது எதிரானது எனவும் என இஸ்ரேல் PM நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. குழுவில் துருக்கி அமைச்சர் இடம்பெற்றிருப்பதே எதிர்ப்புக்கு காரணம் என கூறப்படும் நிலையில், இஸ்ரேல்-USA உறவில் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
News January 18, 2026
உங்களுக்கு எது Happiness?

வாழ்க்கையில் எப்போதும் Happiness இல்லை என புலம்புபவரா நீங்க? உங்களுக்கு எது Happiness-ஐ கொடுக்கும் என நீங்களே உங்களிடம் கேளுங்க. ஒரு குழந்தைக்கு விளையாடுவது Happiness. வயதானவர்களுக்கு பேரக்குழந்தைகளுடன் இருப்பது Happiness. பிஸினஸ் செய்பவருக்கு, லாபம் ஈட்டுவதில் Happiness இருக்கும். உங்களுக்கு எதில் Happiness என சிந்தியுங்கள். அதை தேடி போங்க. மறக்காம எதில் Happiness’னு கமெண்ட் பண்ணுங்க.
News January 18, 2026
‘ஜன நாயகன்’ ரிலீஸ்.. சென்சார் போர்டு ரியாக்ஷன்

ஜன நாயகன் படத்தின் சென்சார் விவகாரம் குறித்து CBFC தலைவர் பிரசூன் ஜோஷி கருத்து கூற மறுத்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் பேசியபோது, விஜய்யின் ஜன நாயகன் பட விவகாரத்தில் என்ன நடக்கிறது எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அதைப் பற்றிப் பேச முடியாது என்றார். இதனிடையே, SC உத்தரவின்படி வரும் 20-ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.


