News January 8, 2025

ஆளுநர் ஏன் வெளியேறினார்? சீமான் சொன்ன பதில்

image

சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியதற்கான காரணத்தை சீமான் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் விற்பனை என ஆட்சியில் பல அவலங்கள் நடந்து வரும் நிலையில், ஆட்சியாளர்கள் எழுதிக் கொடுத்த பொய்யை பேச வேண்டுமா என நினைத்து, ஆளுநர் வெளியேறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை அரசு உரையை படித்திருந்தால், அவர் DMKவில் சேர்ந்து விடலாம் என்றுதான் தாங்கள் நினைப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News January 25, 2026

TN-ஐ பேரழிவில் நிறுத்திய கேடுகெட்ட ஆட்சி: நயினார்

image

பிரபல ரவுடியை அழைத்து வந்த போலீசார் மீது <<18945501>>நாட்டு வெடிகுண்டு<<>> வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இந்த ஒற்றைச் சம்பவமே சாட்சி. மக்கள் பாதுகாப்பை செதில் செதிலாகச் சிதைத்தது மட்டுமல்லாது, தற்போது போலீசார் பாதுகாப்பையும் சூறையாடி, தமிழகத்தை பேரழிவில் நிறுத்தியுள்ளது இந்த கேடுகெட்ட ஆட்சி என விமர்சித்துள்ளார்.

News January 25, 2026

ராசி பலன்கள் (25.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News January 25, 2026

மீண்டும் தமிழகம் வரும் அமித்ஷா

image

மாற்று கட்சிகளை கூட்டணியில் இணைப்பதில் முதலில் தொய்வில் இருந்த NDA கடந்த 2 வாரத்தில் வேகமாக செயல்பட்டது. அதன் விளைவாக பாமக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகளை கூட்டணியில் இணைத்து தங்களின் பலத்தை NDA அதிகரித்தது. இந்நிலையில், வரும் ஜன.28, 29 தேதிகளில் அமித்ஷா தமிழகம் வரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!