News January 8, 2025

கால்பேக் செய்தால் ₹300 கட்: ஜியோ எச்சரிக்கை!

image

‘பிரீமியம் ரேட் சர்வீஸ் மோசடி’ பற்றி ஜியோ நிறுவனம் வார்னிங் கொடுத்துள்ளது. +91 எனத் தொடங்கும் எண்களை தவிர, மற்ற சர்வதேச எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்தால், திரும்ப அழைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஒருவேளை அப்படி அழைத்தால், 1 நிமிடத்திற்கு ₹200-300 வரை உங்கள் பணம் சார்ஜ் செய்யப்படும். எனவே, உங்கள் மொபைலில் International Call Blockingஐ Enable செய்யுமாறு, ஜியோ அட்வைஸ் வழங்கியுள்ளது.

Similar News

News September 14, 2025

BREAKING: நாளை முதல் மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

image

பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சமூக நலத்துறை மூலம் மாநிலம் முழுவதும் 3 லட்சம் விண்ணப்பங்கள் அனுப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகையுடன் குழந்தைகளின் அனைத்து விதமான கல்விச் செலவுகளையும் ஏற்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

News September 14, 2025

நாற்காலிகளில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

image

வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளில் இருக்கும் துளைகள் வெறும் டிசைன் கிடையாது. நாற்காலிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் போது அதற்கிடையில் காற்று புகும். அப்படி அடைபடும் காற்று, வெளியேறாவிட்டால் சேரை பிரித்தெடுப்பது சிரமமாக இருக்கும். இதனாலேயே இந்த துளைகள் போடப்பட்டிருக்கிறது. மேலும், துளைகளை போடுவதால் பிளாஸ்டிக்கின் தேவை குறைந்து, அது உற்பத்தி செலவை குறைக்கிறதாம். SHARE.

News September 14, 2025

அனைத்து பள்ளிகளிலும் நாளை தொடங்குகிறது

image

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளை முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. 6 – 8-ம் வகுப்புகளுக்கு செப்.15 – 25-ம் தேதி வரையிலும், 9 & 10ம் வகுப்பு செப்.15-26-ம் தேதி வரையிலும், 11, 12-ம் வகுப்புகளுக்கு 25-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடக்கவுள்ளன. செப்.26 முதல் அக்.5-ம் தேதி வரை 9 நாள்கள் காலாண்டு விடுமுறையாகும். தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு Way2News சார்பில் வாழ்த்துக்கள்!

error: Content is protected !!