News January 8, 2025
IKT திட்டத்தின் தொகை ₹2 லட்சமாக அதிகரிப்பு

‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48(IKT)’ திட்டத்தில் முதல் 48 மணி நேரத்தில் இலவச சிகிச்சைக்கான தொகை ₹1 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக அதிகரித்து TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் வரை 3.20 லட்சம் பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
Similar News
News January 22, 2026
விஜய்யின் ‘V’ சென்டிமென்ட்

கட்சிப் பெயர், முதல் மாநாடு நடந்த இடம், சின்னம், படத்தின் அறிமுக பாடல் என அனைத்திலும் V சென்டிமென்ட்டை விஜய் கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக V என்றால் Victory என கருதப்படும் நிலையில் வெற்றிக்கழகம், விக்கிரவாண்டி, வி.சாலை, விசில், அண்ணன் ‘வி’ கச்சேரி, வெற்றி கொண்டான் என எல்லாம் ‘V’ மயமாக உள்ளன. முன்னதாக வீரம், வலிமை, விடாமுயற்சி என ‘V’ சென்டிமென்ட்டை அஜித் தான் பின்பற்றுவதாக பேசப்பட்டது.
News January 22, 2026
சற்றுமுன்: விலை கணிசமாக குறைந்தது

நாமக்கல்லில் கறிக்கோழியின் விலை கடந்த சில நாள்களுக்கு முன் வரலாறு காணாத உச்சமாக ஒரு கிலோ ₹152 ஆக உயர்ந்தது. இதனால், சில்லறை கடைகளில் சிக்கன் கிலோ ₹300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கறிக்கோழி விலை கிலோவுக்கு ₹7 குறைந்து ₹145 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முட்டை கொள்முதல் விலை மாற்றமின்றி ₹5.30 ஆக நீடிக்கிறது. உங்க பகுதியில் சிக்கன் விலை எவ்வளவு?
News January 22, 2026
கவர்னர் மாளிகை லோக் பவன் அல்ல; லோக்கல் பவன்: DMK MLA

சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவி அவமதிக்கப்பட்டதாக <<18904228>> கவர்னர் மாளிகை<<>> அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் கவர்னர் உரையின் மீதான விவாதத்தின்போது, கவர்னர் குறித்து கடுமையான விமர்சனங்களை திமுக MLA பரந்தாமன் முன்வைத்தார். அப்போது பேசிய அவர் கவர்னர் மாளிகையை ‘அது லோக் பவன் அல்ல, லோக்கல் பவன்’ என விமர்சித்தார்.


