News January 8, 2025
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் திட்டம் என்ன?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. EVKS இளங்கோவன் குடும்பத்தை CM ஸ்டாலின் வாஞ்சையுடன் அணுகுகிறார். அதனால், இளைய மகனான சஞ்சய் சம்பத்தை நிறுத்த அவர் நினைத்ததாகத் தெரிகிறது. ஆனால், EVKS குடும்பத்தினருக்கு அதில் ஆர்வமில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், சஞ்சய் சம்பத்திற்கு ராஜ்யசபா சீட் கொடுத்துவிட்டு இந்த தேர்தலில் திமுகவே களமிறங்க உள்ளதாகப் பேசப்படுகிறது.
Similar News
News January 21, 2026
பிரபல டிவி சேனலை வாங்குகிறாரா விஜய்?

2026 தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களுக்கு சாதகமாக செயல்பட டிவி சேனல் ஒன்றை தொடங்க தவெக முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக சேனல் தொடங்க உரிமம் வாங்குவது உள்ளிட்ட பல சவால்கள் இருப்பதால், ஏற்கெனவே செயல்படும் முன்னணி செய்தி சேனலை வாங்கும் நடவடிக்கையில் விஜய் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்நிறுவனம் அதிகப்படியான தொகை கேட்பதால் வாங்குவதில் இழுபறி நீடிக்கிறதாம்.
News January 21, 2026
குடும்ப அட்டைகளுக்கு ₹3000.. தமிழக அரசு அறிவிப்பு

TN-ல் 96% பேருக்கு பரிசு தொகுப்பு கிடைத்த நிலையில், தொலைதூர நகரங்கள், வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் என 4% பேருக்கு இந்த பரிசு தொகுப்பை பெற முடியாத சூழல் எழுந்திருக்கிறதாம். எனவே ₹3000 பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பொங்கல் பணத்தை வாங்காதவர்கள், ரேஷன் கடைக்கு சென்று வாங்கி கொள்ளலாம் என உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு அறிவித்துள்ளார்.
News January 21, 2026
வைத்திலிங்கம் விலகல்.. OPS-ன் முதல் ரியாக்ஷன்

மனோஜ் பாண்டியன், JCD பிரபாகர், வைத்திலிங்கம் என OPS ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக மாற்றுக்கட்சிகளில் இணைவது அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில் திமுகவில் வைத்திலிங்கம் இணைந்தது பற்றிய கேள்விக்கு, அதைப்பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார். கூட்டணி விஷயத்தில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றீர்களே என்பதற்கு, தை முடிவதற்கு 25 நாள்கள் இருப்பதாக தெரிவித்து மீண்டும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.


