News January 8, 2025

JOB ALERT: HDFC வங்கியில் ரூ.12 லட்சம் சம்பளத்தில் வேலை

image

HDFCஇல் 500 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. RELATIONSHIP மேனேஜர் நிலையிலான பதவிகளுக்கு இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் – ரூ.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் பட்டப்படிப்பு தேர்ச்சி, SALESஇல் 10 ஆண்டு முன் அனுபவம் கோரப்பட்டுள்ளது. விருப்பம் இருப்போர் பிப். 7-க்குள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News February 26, 2026

நாகை மக்களே.. CM Cell-ல் புகார் அளியுங்கள்!

image

நாகை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <>க்ளிக் <<>>செய்து, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News February 26, 2026

எல்லை மீறாத கவர்ச்சி அழகானது: நடிகை அஞ்சு

image

அழகை ரசிப்பதில் எந்த தவறும் இல்லை, எல்லை மீறாத கவர்ச்சி அழகானது என நடிகை அஞ்சு குரியன் கூறியுள்ளார். சமீபகாலமாக பட விழாக்களில் கவர்ச்சி உடையில் தோன்றும் இவர் SM-ல் அடிக்கடி டிரெண்டாகி வருகிறார். இந்நிலையில், ரசிகர்கள் தரும் அன்பும், ஆதரவுமே தன்னை அழகாக வைத்திருப்பதாக கூறியுள்ளார். இவர், தமிழில் ‘நேரம்’, ‘சென்னை டூ சிங்கப்பூர்’, ‘அதர்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

News February 26, 2026

அரசு பஸ் விபத்துகளில் 463 பேர் பலி.. பேரதிர்ச்சி

image

கடந்த 2025-ல் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 21,122 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தமிழக அரசு பஸ்கள் 1,444 விபத்துகளில் சிக்கியதில் 463 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக விழுப்புரம் மண்டலத்தில், அரசு பஸ் விபத்துகளில் சிக்கி 221 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!