News January 8, 2025
கிளைமாக்ஸை நெருங்கும் தனுஷ் – நயன்தாரா வழக்கு

நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 16, 2026
காசாவில் அமைதி வாரியம்: டிரம்ப்

போரின் கோரமுகத்தை காசாவும், காசா மக்களும் தினம் தினம் அனுபவித்து வருகின்றனர். இதனால், அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், காசாவில் அமைதியை கொண்டுவர வாரியம் அமைக்கப்படும் என்றும், அதன் தலைவராக டிரம்ப் செயல்படுவார் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் உடனே ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.
News January 16, 2026
கம்பேக் கொடுத்தாரா ஜீவா? முந்தும் TTT

பொங்கல் ரேஸில் ஜீவாவின் ‘TTT’ முந்துவதாக கூறப்படுகிறது. நேற்று வெளியான இந்த படத்தின் கதைக்களம், நடிகர்களின் ஆக்டிங், காமெடி, குறைவான ரன் டைம் என அனைத்தும் பிளஸ்ஸாக அமைய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிக்கெட் புக்கிங் தொடர்ந்து அதிகரித்து கொண்டே போகும் நிலையில், ஜீவாவிற்கு இது சரியான கம்பேக் படம் எனவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். நீங்க பாத்தாச்சா TTT.. எப்படி இருக்கு?
News January 16, 2026
BREAKING: தவெகவில் புதிய குழுவை அமைத்தார் விஜய்

சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசார பணிகளை மேற்கொள்ள தவெகவில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான அந்தக் குழுவில் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சைரத்தினம் கரிகாலன், செரவு மைதின், கேத்ரின் பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவானது 234 தொகுதிகளிலும் பிரசார கூட்டங்களை திட்டமிடவுள்ளது.


