News January 8, 2025

குமரி: தாமதமின்றி வழக்குப் பதிவு செய்ய எஸ்பி உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையங்களில் இருசக்கர வாகனம் திருட்டு, நகை பறிப்பு போன்ற பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது முறையாக வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை என மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தி, காலதாமதம் இன்றி உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News February 2, 2026

குமரி: நாளை மின் தடை பகுதிகள் அறிவிப்பு..!

image

நாகர்கோவில், தடிக்காரன்கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம், வல்லன்குமாரன்விளை உபமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் சுங்கான்கடை, தோப்பூர், வேம்பனூர், பார்வதிபுரம், அனந்தன்நகர், புத்தேரி, இறச்சகுளம், அருமநல்லூர், கடுக்கரை, காட்டுப்புதூர், அழகியபாண்டியபுரம், சடையன்குளம், நாவல்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT

News February 2, 2026

ஆதிபராசக்தி கோவிலில் பெளர்ணமி சிறப்பு பூஜை

image

நாகர்கோவில் மாநகராட்சி கிருஷ்ணன் கோவில் ஆதிபராசக்தி கோவிலில் பெளர்ணமி விழாவை முன்னிட்டு நேற்று (பிப் – 1) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.

News February 1, 2026

குமரி: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1. வகை: வங்கி வேலை

2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)

3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)

4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920

5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

6. கடைசி தேதி: 18.02.2026

7.விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>

இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!