News January 8, 2025

‘யார் அந்த சார்?’ ஆளுநர் வாய் திறக்காதது ஏன்?

image

அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக பேரவையில் அதிமுக, காங்., பாமக, பாஜக, இடதுசாரி கட்சிகள் நோட்டீஸ் அளித்திருந்தன. இந்நிலையில், கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்கப்பட்டு விவாதம் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் வெளியானதற்கு பல்கலை. வேந்தரான ஆளுநரே பொறுப்பேற்க வேண்டுமென வேல்முருகன் கூறியுள்ளார். யார் அந்த சார் என்பது குறித்து ஆளுநர் வாய் திறக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News January 27, 2026

NDA-வில் இபிஎஸ் உடன் இணையும் ஓபிஎஸ்!

image

NDA-வில் மீண்டும் OPS-ஐ இணைக்க தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. TTV தினகரனை தொடர்ந்து, OPS-யும் கூட்டணியில் சேர்க்க EPS இசைவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக OPS உடன் TTV தினகரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மதுரையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த TTV தினகரன், OPS நிச்சயம் தங்கள் கூட்டணிக்கு வருவார்; அவர் வேறு எங்கும் செல்ல மாட்டார் என்றார். உங்கள் கருத்து என்ன?

News January 27, 2026

டாஸ்மாக் வசூல்.. ஒரே நாளில் இவ்வளவு கோடியா!

image

குடியரசு தினம் என்பதால் நேற்று டாஸ்மாக் விடுமுறை ஆகும். இதனால் அதற்கு முந்தைய நாளில் (ஜன.25) மதுபான விற்பனை சூடுபிடித்துள்ளது. இதன்படி, அன்றைய தினம் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ₹220 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு ஜன.25 அன்று ₹200 கோடிக்கு மது விற்பனை ஆகியிருந்தது. முன்னதாக, பொங்கல் விடுமுறையில் ₹850 கோடிக்கு டாஸ்மாக் வருமானம் ஈட்டியிருந்தது.

News January 27, 2026

Jana Nayagan: அரசியல் ஆதாயம் தேட முயல்கிறாரா விஜய்?

image

‘ஜன நாயகன்’ விவகாரத்தில் CBFC-க்கு நெருக்கடி கொடுக்க KVN நிறுவனம் முயன்றதே பிரச்னைக்கு காரணம் என நடிகரும், CBFC Ex உறுப்பினருமான SV சேகர் தெரிவித்துள்ளார். <<18971849>>ஐகோர்ட் தீர்ப்பு தொடர்பாக<<>> பேசிய அவர், CBFC-ன் பரிந்துரைகளை உரிய காலத்திற்குள் செய்யாமல், கடைசி நேரத்தில் கோர்ட்டுக்கு சென்றது தவறு என்றார். மேலும், ஜன நாயகன் பட விவகாரத்தில் அரசியல் அனுதாபம் தேடவே விஜய் அமைதி காப்பதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!