News January 8, 2025
இந்த நேரத்தில் மட்டுமே வேட்புமனு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்.5 நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜன.10 தொடங்கி ஜன.17 வரை நடக்கிறது. ஆனால் அரசு விடுமுறை நாட்களைத் தவிர ஜன.10, 13, 17 ஆகிய 3 நாட்கள் மட்டும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா அறிவித்து உள்ளார்.
Similar News
News February 12, 2026
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணமாக அதிவேக ஓட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. சில நொடிகளின் வேகம், வாழ்நாள் முழுவதும் நீங்காத துயரத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் மற்றும் விதிகளை பின்பற்றாமல் பைக் ஓட்டுவது பெரும் ஆபத்துக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
News February 11, 2026
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று (11.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 11, 2026
ஈரோட்டில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

ஈரோடு, அந்தியூரில் புகழ்பெற்ற விரபத்திரசுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீரபத்திரரை வழிபட்டால், கடன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்குமாம். இடம் வாங்குதல், விற்பதில் பிரச்சனை, வீடு கட்டுவதில் தடங்கள், ஆகிய பிரச்சனைகள் நீங்க, ஒரு செங்கல்லை எடுத்துச் சென்று, வீரபத்திரரிடம் வைத்து பூஜை செய்து எடுத்து வந்தால், தடைகள் நீங்குமாம். இதை Share பண்ணுங்க.


