News January 8, 2025
அயோத்தி கோயிலுக்கு ₹50,000 Coolers போட்டு வந்தவர் கைது

சில விஷயங்களை செய்யக் கூடாது எனக் கூறினால், சிலர் அதையே செய்து பிரச்னைகளில் சிக்கி கொள்கின்றனர். அயோத்தி ராமர் கோயில் உள்ளே புகைப்படம், வீடியோ எடுக்க தடை இருக்கிறது. ஆனால், ‘நேக்காக’ கண்ணாடியில் கேமரா வைத்து போட்டோ, வீடியோக்களை எடுத்த குஜராத்தை சேர்ந்த ஜானி ஜெய்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்ணாடி விலை தெரியுமா ₹50 ஆயிரம். கைதானவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இது தேவையா…?
Similar News
News September 14, 2025
FLASH: சிக்கன் விலை உயர்ந்தது

நாமக்கல் மண்டலத்தில் சிக்கன் விலை இன்று(செப்.14) கிலோவுக்கு ₹6 அதிகரித்துள்ளது. இதனால், கறிக்கோழி 1 கிலோ ₹121-க்கு விற்பனையாகிறது. நாமக்கல்லில் ஒரு முட்டை 5 ரூபாய் 15 காசுகளுக்கும், சென்னையில் 5 ரூபாய் 70 காசுகளுக்கும் விற்பனையாகிறது. சென்னையில் கறிக்கோழி உயிருடன் 1 கிலோ ₹140-க்கும், தோல் நீக்கிய கறி ₹200-க்கும் விற்பனையாகிறது. உங்கள் ஊரில் ஒரு கிலோ சிக்கன் எவ்வளவு? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 14, 2025
BREAKING: திமுகவில் நடிகருக்கு முக்கிய பொறுப்பு

திமுகவின் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை தலைவராக நடிகர் போஸ் வெங்கட் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்து MP தமிழச்சி தங்கபாண்டியன் கல்வியாளர் அணி செயலாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டதால் போஸ் வெங்கட் இப்பொறுப்புக்கு வந்துள்ளார். இதற்கு CM ஸ்டாலின், DCM உதயநிதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ள போஸ் வெங்கட், வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வது உறுதி எனவும் கூறியுள்ளார்.
News September 14, 2025
பேரழகான டாப் 5 இந்திய ரயில் நிலையங்கள்

‘அழகு’ என்பது மனிதரில் மட்டுமல்ல, நாம் காணும் அனைத்திலும் உள்ளது. அதிலும் பயணம் என்பது அனுபவம் கலந்த அழகு. குறிப்பாக, ரயில் பயணம், நமது மனதை அதிகமாகவே அழகாக்கிறது. அந்த வகையில், ரயில் நிலையங்களும் அழகாக இருந்தால் பயணம் பேரழகாகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள டாப் 5 அழகான ரயில் நிலையங்களை மேலே Swipe செய்து பாருங்கள். அதை பார்த்ததும் உங்களுக்கு தோன்றும் கவிதையை கமெண்ட்டில் எழுதுங்கள்.