News January 8, 2025
தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை: நன்னிலம் கோர்ட் உத்தரவு

நன்னிலம் அருகே உள்ள பனங்காட்டாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (37). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு கொல்லுமாங்குடியில் பூக்கடை வைத்துள்ள முத்து என்பவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதுதொடர்பாக நன்னிலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சுரேசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11,500 அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
Similar News
News July 10, 2025
திருவாரூர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை VAO-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் VAO யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருவாரூர் மாவட்ட மக்கள் 04366226970 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க
News July 10, 2025
திருவாரூர்: குறுவை பயிர் காப்பீடு-கலெக்டர் கொடுத்த தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பயிர் காப்பீடு செய்திட வருகிற 31-ம் தேதி கடைசி நாளாகும். எனவே, குறுவை பயிர் சாகுபடி விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ (இ-சேவை மையங்கள்), www.pmfby.gov.in என்ற இணையதளத்தில் நேரடியாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம் என கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE செய்ங்க…
News July 9, 2025
திருவாரூர்: 10th படித்தால் ரூ.50,000 வரை சம்பளம் 1/2

திருவாரூர் மக்களே அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003741>>பாகம்-2<<>>)