News January 8, 2025

தேனி மாவட்டத்தை சேர்ந்த 48 மாணவரகள்  வெற்றி 

image

மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் தேனி மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 64 பள்ளிகளைச் சேர்ந்த 240 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் நடைபெற்ற போட்டிகளில் 7 போட்டிகளில் முதலிடத்தையும், 7 போட்டிகளில் 2-ம் இடத்தையும், 4 போட்டிகளில் 3-ம் இடத்தையும் பிடித்தது 48 பேர் வெற்றி பெற்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 12, 2026

தேனி மாவட்டத்தில் 3000 பேருக்கு குடும்ப கட்டுப்பாடு

image

தேனி மாவட்டத்தில் கடந்த 2025ல் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 3082 பேர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 ஆண்களுக்கு வாசக்டமி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024 -2025 ல், 21 ஆண்கள், 4299 பெண்கள் என மொத்தம் 4320 பேர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன்கள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 12, 2026

10.ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்.23ம் தேதி துவக்கம்

image

தேனி மாவட்டத்தில் அரசு, தனியார், உதவி பெறும், மெட்ரிக் என மொத்தம் 66 உயர்நிலைபள்ளிகள், 156 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் பத்தாம் வகுப்பில் 144 பள்ளிகளில் 14,103 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே செய்முறைத்தேர்வுகள் நடக்க உள்ளன. செய்முறைத்தேர்வுகள் பிப்.23.ல் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 12, 2026

தேனி: கடனை திருப்பி செலுத்தியும் கொலை மிரட்டல்

image

போடி அருகே தருமத்துப்பட்டி பகுதியை சேர்ந்த திவ்யபாரதி (25)யின் பெற்றோர், சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த மகாலட்சுமியிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி பின்னர் திருப்பிச் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பிறகும் மேலும் பணம் கேட்டு மகாலட்சுமி, அவரது மகள் வினோ, தர்மராஜ், சுருளியாண்டி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போடி தாலுகா போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!