News January 8, 2025

இன்று கூட்டுக்குழுவின் முதல் கூட்டம்

image

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை ஆராயும் பாராளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. பாஜக MP., சவுத்ரி தலைமையிலான JCP குழுவில் பிரியங்கா காந்தி, செல்வகணபதி உள்ளிட்ட 31 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் மத்திய சட்டம் & நீதித்துறை அமைச்சக அதிகாரிகள், உறுப்பினர்களுக்கு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள விதிகள் குறித்து விளக்கம் அளிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

Similar News

News January 24, 2026

ரஜினியுடன் மீனா PHOTO

image

நடிகை மீனா, ரஜினியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ரசிகர்கள் SM-ல் பகிர்ந்து வருகின்றனர். பல வருடங்களுக்கு பின்னர் இருவரும் சந்தித்த தருணத்தை மீனா தனது இன்ஸ்டாவில், சூப்பர் ஸ்டாருடன் என பகிர்ந்துள்ளார். ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, பின்னர் எஜமான், முத்து போன்ற படங்களில் ஜோடியாகவும் நடித்தார். இந்த புகைப்படம் இருவரது நீண்டகால நட்பை அழகாக காட்டுகிறது.

News January 24, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 590 ▶குறள்: சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை. ▶பொருள்: ஓர் ஒற்றரின் திறனை வியந்து, பிறர் அறிய அவருக்கு சிறப்பு செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

News January 24, 2026

EB கட்டணம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்

image

இந்த செயல்பாடுகள் 10% வரை மின்சார இழப்பை ஏற்படுத்தும்: *TV-யை ஆஃப் செய்து, Set-top box-ஐ அப்படியே விடுதல் *ரிமோட்டில் மட்டும் off செய்துவிட்டு, ஸ்விட்சை off செய்யாதது *AC remote-ஐ மட்டும் off செய்துவிட்டு, Stabilizer-ஐ அப்படியே விடுதல் *பயன்பாடு இல்லாமல் ஸ்விட்ச் போட்ட நிலையில், போன் சார்ஜர் இருத்தல். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தாத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு र1000 வரை கூடுதலாக செலவாகிறது.

error: Content is protected !!