News January 8, 2025
கார் மீது லாரி மோதி விபத்து: இளைஞர் கவலைக்கிடம்

புதுச்சேரியில் இருந்து சென்னை விமான நிலையம் நோக்கி, கார் ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருக்கிறது. காரை லட்சுமி காந்தன் என்ற இளைஞர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கார் மீது லாரி ஒன்று மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த இளைஞர் காருக்குள் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அவரை மீட்ட தீயணைப்பு துறையினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Similar News
News February 2, 2026
சென்னை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

சென்னை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
News February 2, 2026
சொத்து வரி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை மாநகராட்சிக்கு நீண்டகாலமாக ரூ.33 கோடியே 68 லட்சம் சொத்துவரி நிலுவை வைத்திருக்கும், 100 பேர் அடங்கிய பட்டியலை,மாநகராட்சி நிர்வாகம் இணையதளத்தில் https://www.chennaicorporation.gov.in/gcc/ வெளியிட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் சொத்துவரி செலுத்தாத 5லட்சம் பேருக்கு நினைவூட்டல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. முதல் 30 நாட்களில் வரி செலுத்துவோருக்கு அதிகபட்சம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
News February 2, 2026
BREAKING: சென்னையில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளிக்குச் செல்லும் வழியில், இன்று காலை இரண்டு மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் மதுரவாயல் பைபாஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, இரண்டு சிறுவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


