News January 8, 2025
நடைபயிற்சி சென்றவர் மீது கார் மோதி விபத்து

புதுச்சேரி, அரியூர் பாரதி நகரை சேர்ந்தவர் வேல்முருகன். என்.ஆர்.காங்., பிரமுகரான இவர், அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் ஆதரவாளர். துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வேல்முருகன் 3 நண்பருடன் சாலையில் வாக்கிங் செல்லும் போது சாலையில் வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News September 11, 2025
புதுவை: பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !
News September 11, 2025
புதுச்சேரியில் பாரதியார் நினைவு நாள் அனுசரிப்பு

பாரதியார் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில், இன்று (11.09.2025) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன் திருமுருகன் சட்டமன்ற உறுப்பினர்கள் AK சாய், J. சரவணன்குமார், S. ரமேஷ் R.பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
News September 11, 2025
வி.ஏ.ஓ போட்டி தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்!

புதுச்சேரி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள 41 கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான போட்டி தேர்வு, வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகே, மற்றும் ஏனாம் பகுதிகளில் மொத்தம் 86 தேர்வு மையங்களில் நடக்கிறது. இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டினை, தேர்வர்கள் htttp://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் இன்று 11ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.