News January 8, 2025

போட்டிகளுக்கு அழைப்பு விடுத்த தென்காசி கலெக்டர்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(ஜன.7) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 21 ஆம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு 22 ஆம் தேதியும் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வைத்து நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

Similar News

News February 16, 2026

தென்காசி: மகளிருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி

image

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் <>www.tabcedco.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 16, 2026

தென்காசி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)

News February 16, 2026

தென்காசி: கேட் கீப்பருக்கு பாலியல் தொல்லை; நீதிமன்றம் அதிரடி

image

தென்காசி, பாவூர்ச்சத்திரம் ரயில் நிலைய கேட் கீப்பராக பணியாற்றி வந்த பெண்ணிடம், 2023 ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த அனீஸ் என்ற இளைஞர், அவர் தனியாக அறையில் இருந்த போது, அவரை கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இது குறித்த வழக்கில் அனீசுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது. ஏற்கனவே இவர் மீது பாலியல் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!