News January 8, 2025
சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகள்

எழும்பூர் – நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகம் பேர் பயணிப்பதால், கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததையடுத்து, இரு மார்க்கத்திலும் வரும் 11ஆம் தேதி முதல் 16 பெட்டிகளாக இயக்கப்பட உள்ளன. நெல்லை – எழும்பூர் (6AM- 1.50PM), எழும்பூர் – நெல்லை (2.50PM – 10.40PM) SHARE IT
Similar News
News August 26, 2025
1500 இடங்களில் மட்டுமே பிள்ளையார் சிலை வைக்க அனுமதி

சென்னை பெருநகரங்களில் பிள்ளையார் சதூர்த்தி விழாவில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட 2000 மனுக்கள் பெறப்பட்டதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சுமார் 1500 மனுக்களுக்கு மட்டுமே பிள்ளையார் சிலையை வைத்து வழிபட சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். சிலைகள் வைக்கப்படும் இடங்கள் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த அறிவுறுத்தியுள்ளார்.
News August 26, 2025
6 கட்சிகளின் பதிவு ரத்து செய்ய வாய்ப்பு!

சென்னையில் பதிவு செய்யப்பட்ட 6 கட்சிகளின் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என இன்று (ஆக.26) விளக்கம் அளிக்கும்படி கட்சிகளுக்கு தலைமை தேர்தல் அலுவலகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. 6 ஆண்டுகளாக இந்த கட்சிகள் எந்த தேர்தலிலும் போட்டியிடாததால் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதில் மனிதநேய மக்கள், பெருந்தலைவர் மக்கள், மக்கள் தேசிய, கோகுல மக்கள், இந்திய லவ்வர்ஸ் பார்டி, இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிகள் உள்ளது.
News August 25, 2025
சென்னை போலீசின் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, கிரேட்டர் சென்னை போலீஸ் “Knights on Night Rounds” திட்டத்தின் கீழ் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பலிகேன், மயிலாப்பூர், அடையார், டி.நகர், அண்ணாநகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவசர தேவைக்கு அவர்களின் மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.