News March 25, 2024
வேலூர் 45 லட்சம் பறிமுதல் கலெக்டர் தகவல்

மக்களவை தேர்தல் முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நேற்று (மார்ச் 24) வரை வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 45,28. 260 ரொக்கப்பணமும், 281 மதுபாட்டில்களும், 634 பட்டு சேலைகளும், சுடிதார் ஆடைகளும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 4, 2026
வேலூர்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்!

வேலூர் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
News February 4, 2026
வேலூரில் 15,200 பழச்செடி தொகுப்புகள் விநியோகம்

தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் 5 வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு 75 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பில் மா, எலுமிச்சை, நெல்லி, கொய்யா, சீதா ஆகிய பழச்செடிகள் இருக்கும். இதுவரை 15,200 பேருக்கு மானியத்துடன் பழச்செடிகள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News February 4, 2026
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.


