News January 8, 2025
Age is just a number…82 வயதில் சாதித்த மூதாட்டி

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் கோவையைச் சேர்ந்த மூதாட்டி தங்கம் வென்று அசத்தியுள்ளார். 82 வயதான கிட்டம்மாளுக்கு, தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வார இறுதி நாள்களில் உடற்பயிற்சி மேற்கொண்ட அவர், டெல்லியில் ‘நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன்’ சார்பில் நடந்த பளு தூக்கும் போட்டி பங்கேற்றார். 50 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
Similar News
News February 22, 2026
திமுக மீது வெறியில் இருக்கும் மக்கள்: இபிஎஸ்

திருவள்ளூரில் பரப்புரை மேற்கொண்ட EPS, திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். அங்கன்வாடி ஊழியர்கள், விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது என கேள்வி எழுப்பிய அவர், வாக்குறுதியை நிறைவேற்றாத DMK மீது மக்கள் வெறியில் இருப்பதாக தெரிவித்தார். மேலும், வாக்குப்பதிவு இயந்திரம் உடையும் அளவிற்கு மக்கள் ADMK-வுக்கு வாக்களிப்பார்கள் எனவும் கூறினார்.
News February 22, 2026
3 ராசியினருக்கு எச்சரிக்கை

புதன் பகவான் வரும் 26-ம் தேதி கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்க இருப்பதால், 3 ராசியினருக்கு சோதனை காலமான அமையுமாம். *கடகம்: வேலை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயரதிகாரிகளுடன் பிரச்னை ஏற்படலாம். *கன்னி: ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டினால், மருத்துவ செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. *மகரம்: வார்த்தை உபயோகத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். தொண்டை, காது பிரச்னை வரலாம்.
News February 22, 2026
முட்டை விலை மேலும் குறைந்தது

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை 20 காசுகள் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முட்டை விலை கொள்முதல் விலை ₹5.20 இருந்து ₹5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாள்களில் மட்டும் முட்டை விலை 40 காசுகள் சரிந்துள்ளது. முட்டை விலை தொடர்ந்து சரிவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். உங்க ஊரில் முட்டை விலை என்ன?


