News January 8, 2025

11ஆம் தேதி முதல் ‘புஷ்பா 2’ புதிய வெர்ஷன்

image

3.15 மணி நேரம் ஓடும் ‘புஷ்பா 2’ படத்தில், கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வரும் 11ஆம் தேதி முதல் புதிய வெர்ஷன் திரையிடப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான இத்திரைப்படம், 32 நாட்களில் உலகம் முழுவதும் ₹1,831 கோடியை வசூலித்துள்ளது. விரைவில் ₹2,000 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News February 13, 2026

நீங்க எத்தனை முறை காதலில் விழுந்தீங்க?

image

காதலில் விழாத மனிதர்கள் இவ்வுலகில் ஏது? நினைவிலிருந்து நீங்காத முதல் காதலை தொடர்ந்து பின்னாளில் பல முறை காதலில் விழுகிறோம். அப்படி, மனிதர்கள் தங்களது வாழ்க்கையில் எத்தனை முறை காதலில் விழுகிறார்கள் என்று அமெரிக்காவில் 18 – 99 வயதுக்குட்பட்ட 10,036 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 14% பேர் ஒருமுறை கூட காதலில் விழவே இல்லையாம். 30% பேர் 2 முறை, 17% பேர் 3 முறை காதலில் விழுந்தது தெரியவந்துள்ளது.

News February 13, 2026

மறைவுக்கு பின் ரோபோ சங்கருக்கு கிடைத்த கௌரவம்

image

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் இன்று வழங்கப்பட்டன. இதில், ரோபோ சங்கருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான 2 விருதுகள் (வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், இரவில் நிழல்) வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட அவரது மகள் இந்திரஜா, இந்த இடத்தில் அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என உருக்கமுடன் தெரிவித்தார். மேலும், சினிமாத்துறையில் அப்பாவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.

News February 13, 2026

சிறந்த நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவி (PHOTOS)

image

2016-2022 மாநில அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை கார்த்தி, தனுஷ், சூர்யா விஜய் சேதுபதி ஆகியோரும் சிறந்த நடிகைக்கான விருதை சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் பெற்றுக் கொண்டனர். அத்துடன் மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கார்கி ஆகியவற்றுக்கு சிறந்த திரைப்படங்களுக்கான விருது வழங்கப்பட்டது.

error: Content is protected !!