News January 8, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 142 ▶குறள்: அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். ▶பொருள்: அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.
Similar News
News February 7, 2026
பேச்சுவார்த்தை குழு அமைக்க திணறுகிறதா திமுக?

கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக முன்னேறி செல்ல, காங்கிரஸின் நெருக்கடியால் திமுக திணறி வருகிறதாம். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய பேச்சுவார்த்தை குழு விரைவில் அமைக்கப்படும் என ஸ்டாலின் கூறி 3 நாள்கள் ஆகியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. என்னவென்று விசாரித்தால், தேர்தலில் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை கூட சொல்லாமல் காங்., இழுத்தடித்து வருகிறதாம். அதனால் CM-க்கு ஏக வருத்தமாம்.
News February 7, 2026
இனி முழு கவனமும் சட்டமன்ற தேர்தல் தான்: பிரேமலதா

தான் இப்போது ராஜ்யசபாவை நம்பி இல்லை. சட்டமன்ற தேர்தலில்தான் முழு கவனம் செலுத்தி வருவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். சட்டமன்ற தொகுதியுடன் ராஜ்ய சபா சீட்டுக்கும் அழுத்தம் கொடுத்து வந்ததே தேமுதிக கூட்டணி முடிவின் தாமதத்திற்கு காரணமாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி சட்டமன்ற தேர்தலில் மட்டுமே கவனம் குவிப்பதாக பிரேமலதா கூறியுள்ளதால், விரைவில் தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்லும் என்பது தெரியவரும்.
News February 7, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


