News January 8, 2025
சிறுமி வன்கொடுமை வழக்கில் இருவர் கைது

சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ராஜி, அதிமுக நிர்வாகி சுதாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளி எனக் கருதப்படும் சதீஷுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சுதாகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்க சென்ற சிறுமியின் பெற்றோரைத் தாக்கியதாக ராஜி கைது செய்யப்பட்டுள்ளார். இருவரையும் ஜன. 21ஆம் தேதி வரை சிறையில் அடைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
தூத்துக்குடி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.<
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News January 19, 2026
விஜய்யிடம் CBI அடுக்கிய கேள்விகள்.. கசிந்தது தகவல்!

கரூர் வழக்கில் விஜய்யை விசாரிக்கும் CBI, அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இவ்விவகாரத்தில் அரசு முறையான நடைமுறையை பின்பற்றாததே காரணம் என தவெக தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதன்பிறகு விஜய்யிடம் கேள்விகளை அடுக்கிய CBI, கூட்டத்தில் இருந்து தண்ணீர் பாட்டிலை வீசியபோது நெரிசலை பார்க்கவில்லையா? தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தது ஏன்? கீழே நிலைமை மோசமானது தெரியவில்லையா என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது
News January 19, 2026
சிறுவன் கைகளில் மும்பை மேயர் பதவி!

தேர்தல் முடிந்தாலும், மும்பை மேயர் யார் என்பது சஸ்பென்ஸாக இருக்க காரணம் அங்குள்ள குலுக்கல் முறை! மும்பை மேயர் பதவி 2.5 ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இடஒதுக்கீடு (பெண்/SC/ST/OBC/பொது) செய்யப்படும். சீட்டு எழுதி குலுக்கி போட்டு, மாநகராட்சி பள்ளி சிறுவன் ஒருவன் எடுப்பான். அதில் வரும் பிரிவை சேர்ந்த வேட்பாளர்களில் இருந்து மேயர் தேர்வு செய்யப்படுவார். அடுத்தவாரம் இந்த தேர்வு நடைபெறவுள்ளது.


