News January 8, 2025
24 மணி நேரம் டைம்.. ₹1.5 லட்சம் கிடைக்கும்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சாலை விபத்திற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். விபத்து நடந்து 24 மணி நேரத்திற்குள் சாலை விபத்து குறித்து போலிசாருக்கு தெரிவித்தால், பாதிக்கப்பட்டவரின் சிகிச்சை செலவுக்கு ₹1.5 லட்சம் உடனடியாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழக்கும் நபரின் குடும்பத்தாருக்கு ₹2 லட்சம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News January 26, 2026
வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நிற்கும் விதி

தேசிய கீதம் போல வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நிற்கும் விதியை கொண்டு வருவதற்கு உள்துறை அமைச்சகம் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, 1971-ல் கொண்டுவரப்பட்ட தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டமானது தேசிய கீதத்திற்கு மட்டுமே பொருந்தும். எனவே, வந்தே மாதரம் பாடலுக்காக சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
News January 26, 2026
டபுள் இன்ஜின், ரிப்பேர் ஆன இன்ஜின்: கனிமொழி

பல்வேறு திசைகளில் இருந்து பல கனவுகளுடன் தமிழ்நாட்டை நோக்கி படையெடுப்பவர்களுக்கு தமிழக பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் கனிமொழி தெரிவித்துள்ளார். பாஜக சொல்லும் டபுள் இன்ஜின், ரிப்பேர் ஆன இன்ஜினாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சாதித்துக் காட்டியதுதான் திராவிட மாடல் இன்ஜின் என மோடியின் விமர்சனத்திற்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
News January 26, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

அதிமுக கூட்டணியில் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி புதிதாக இணைந்துள்ளது. சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் EPS-ஐ சந்தித்த இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் (தமிழக விவசாயிகள் சங்கம்) மாநிலத் தலைவர் வெட்டவலம் கே.மணிகண்டன், பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் EPS-யிடம் வழங்கினார்.


