News January 8, 2025
எண்ணைக்காப்பு உற்சவத்தின் முதல் நாளில் ஆண்டாள்

ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் பாவை நோன்பு இருப்பதற்காக பெருமாளிடம் நியமனம் பெறும் பிரியாவிடை நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.இதனைத் ஆண்டாள் புறப்பட்டு மாடவீதி வழியாக திருமுக்குளம் எண்ணைக்காப்பு மண்டபத்திற்கு வந்தடைந்தார். இதனையடுத்து முதலாம் நாளான இன்று எண்ணைக் காப்பு உற்சவம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Similar News
News February 20, 2026
போக்சோ வழக்கில் கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் காளிராஜன்(56). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு திண்பண்டம் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். சிவகாசி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காளிராஜனை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று போக்சோ நீதிமன்ற நீதிபதி காளிராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News February 19, 2026
விருதுநகர் : வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – Apply..!

விருதுநகர் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். இங்கு <
News February 19, 2026
விருதுநகர்: பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

ராயல் மெளஸி மில்க் டீ மற்றும் நியூ எரா ராயல் மெளஸி மில்க் டீ ஆகிய தளங்களில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவோருக்கு கமிஷன் அடிப்படையில் அதிக பணம் திருப்பி கொடுப்பதாக கூறி ஆசை வார்த்தை காட்டி அதிகமான அளவில் பணம் வசூல் செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இதில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என காவல் ஆய்வாளார் தெரிவித்துள்ளார்.


