News January 7, 2025

பள்ளி மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

image

நாமக்கல் துறையூர் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர் விடுதியில் தங்கி படித்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு விடுதியின் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Similar News

News January 24, 2026

நாமக்கல்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

நாமக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்!ஷேர் பண்ணுங்க

News January 24, 2026

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கோழி ரூ. 8 சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.145-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.141ஆக குறைந்து உள்ளது. அதை போல் முட்டைக்கோழி கிலோ ரூ. 80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் கிலோவுக்கு ரூ.8 குறைந்து, ரூ. 72 ஆக விற்பனையாகி வருகின்றது.

News January 24, 2026

நாமக்கல் மாவட்டத்துக்கு 2 நாள் எச்சரிக்கை!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.24) முதல் 4 நாட்கள் நிலவும் வானிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) (ம) நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும், வருகிற 27-ந் தேதியும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 66.2, அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!