News January 7, 2025
புதன் பெயர்ச்சி: கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

புதன் பகவான் ஜன.4 முதல் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார். இதனால் வரும் ஜன.24 வரை பின்வரும் ராசிகளுக்கு சில சவால்கள் ஏற்படலாம். 1)ரிஷபம்: சில பாதகமான சூழல்கள், மன உளைச்சல் ஏற்படலாம். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. 2) கடகம்: எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. தொழில், வேலையிலும் கவனம் தேவை 3)மகரம்: பணத் தேவைகளும், செலவுகளும் அதிகரிக்கும். எல்லாவற்றிலும் நிதானம் தேவை.
Similar News
News January 24, 2026
இரவு 11 மணிக்கு மேல் தூங்குகிறீர்களா?

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் தூங்கும் நேரமே குறைந்துவிட்டது. முடிந்தவரை தூங்க முயற்சிக்கிறோம். ஆனால், இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் டாக்டர்கள். லேட்டாக தூங்குவது உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும், ஜீரணமும் சரியாக இருக்காது, தூங்கி எழுந்த பின்பும் சோர்வாக உணர்வீர்கள். நோய் எதிர்ப்பு சக்தியையும் இது கடுமையாக பாதிக்கும் என எச்சரிக்கின்றனர்.
News January 24, 2026
ராசி பலன்கள் (24.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 24, 2026
அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்: EPS

பொதுக்கூட்டத்திற்கு பிறகு EPS- TTV இருவரும் அருகருகே அமர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’நானும், தினகரனும் ஜெ., வளர்த்த பிள்ளைகள், எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை மறந்து, ஜெ., ஆட்சி மலர வேண்டும் என்பதற்காக மீண்டும் இணைந்திருக்கிறோம்’ என EPS பதிலளித்தார். அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


