News January 7, 2025
காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொட்டில் குழந்தை திட்டத்திற்கு, சேலம் மாவட்டத்தில், ஐந்து காப்பாளர் மற்றும் செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், 42 வயதிற்குள் இருக்கும் விருப்பமுள்ள பெண்கள் 31 1.2025க்குள் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் உள்ள, துறை அலுவலகத்தில், விண்ணப்பங்களை வழங்கலாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News February 3, 2026
JUST IN: வாழப்பாடி அருகே விபத்தில் பெண் உயிரிழப்பு

வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மனைவி ஜெயலட்சுமி. இவர் வழக்கம் போல அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த அமரர் ஊர்தி எதிர்பாராத விதமாக ஜெயலட்சுமி மீது மோதியது. இவ்விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயலட்சுமியை, மீட்டு உடனடியாக GH-ல் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 3, 2026
சேலம்: POST OFFICE வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 2, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.


