News March 25, 2024

குத்தாலம் அருகே தீவிர வாகன சோதனை

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ஏ.பி.மகாபாரதி உத்தரவின் பெயரில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. இதில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்து தலைமையில் முதல் நிலை காவலர்கள் ஜெயசெல்வம் , சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அப்பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி பணம் பரிசுப் பொருட்கள் உள்ளதா என தீவிர சோதனை செய்தனர்.

Similar News

News January 14, 2026

மயிலாடுதுறை: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

image

மயிலாடுதுறை மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 14, 2026

மயிலாடுதுறையில் கலைவிழா நாளை தொடக்கம்

image

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல கலைப்பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை (ஜன.15) கலைவிழா தொடங்குகிறது என தஞ்சை மண்டல கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. ராஜாராமன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் ஜன.15, 16 ஆகிய தேதிகளில் மாலை 5 முதல் இரவு 9 மணிவரை நடைபெறுகிறது.

News January 14, 2026

மயிலாடுதுறை: வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்

image

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்காக மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதுமாக சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.

error: Content is protected !!