News January 7, 2025
இந்த 8 விஷயங்களை கவனிங்க

உங்கள் லைப்ஸ்டைலில் இந்த 8 மாற்றங்களை செய்தால், நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் மருத்துவர்கள்: 1)சத்தான உணவுகளை சாப்பிடுங்கள் 2)புகைப்பிடிப்பதை தவிருங்கள் 3)இரவில் நன்றாக தூங்குங்கள் 4)ஓடியாடி வேலை / உடற்பயிற்சி செய்யுங்கள் 5)மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள் 6)அடிக்கடி மது அருந்துவதை தவிர்க்கவும் 7)போதைகளை தவிர்க்கவும் 8)பாசிடிவ் உறவுகளை கொண்டிருங்கள்
Similar News
News January 18, 2026
₹16 லட்சம் கோடியை எட்டும் சில்லறை ஆடை வணிகம்

நாட்டில் சில்லறை ஆடை வணிகம் 2030-ம் ஆண்டுக்குள் ₹16 லட்சம் கோடியாக விரிவடையும் என்று ‘CareEdge’ தெரிவித்துள்ளது. தற்போது, சில்லறை வணிகம் ₹9.3 லட்சம் கோடியுடன் சந்தையில் 41% பங்கைக் கொண்டுள்ளது. பிராண்டட் ஆடைகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், இது மேலும் 13% வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2 & 3 அடுக்கு நகரங்களில் ஜூடியோ, மேக்ஸ், ரிலையன்ஸ் உள்ளிட்டவை வணிகத்தை விரிவுபடுத்தி வருகின்றன.
News January 18, 2026
விக்ரம் சாராபாய் பொன்மொழிகள்

*முன்னேற விரும்பினால், புதிய பாதைகளைத் தேடத் தயங்கக்கூடாது. *இளைஞர்களின் கனவுகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குகின்றன. *இரைச்சலுக்கு மத்தியில் இசையை கேட்கத் தெரிந்தவனால் மகத்தான சாதனைகளை நிகழ்த்த முடியும். *விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானவை. *ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் அறிவியல் மனப்பாங்கில் தான் அடிப்படையாக உள்ளது.
News January 18, 2026
சவுதி அரேபியாவில் அரிய சிறுத்தை மம்மிகள்

வடக்கு சவுதி அரேபியாவில் உள்ள குகைகளில் அரிய சிறுத்தை எச்சங்களை (மம்மிகள்) கண்டுபிடித்துள்ளனர். அவை 130 – 1800 ஆண்டுகள் பழமையானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அரார் நகருக்கு அருகே 7 சிறுத்தை மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றுடன் 54 சிறுத்தை எலும்புகளும் இருந்தன. பாலைவனங்கள், பனிப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் மம்மிகேஷன் இயற்கையாகவே நிகழ்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


