News March 25, 2024
தேனி: நிர்வாகிகளை சந்தித்த வேட்பாளர்

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இன்று மரியாதை நிமித்தமாக அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் எம்.பி.எஸ் முருகனை கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வின் போது, அதிமுக (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் முருக்கோடை இராமர், தேனி நகர செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 27, 2025
தேனி: மின்சாரம் தாக்கி வட மாநில தொழிலாளர் படுகாயம்

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் மதன்லால் சௌகான் (40). இவர் ஆண்டிபட்டி ரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள சப் செக்சன் போஸ்டில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் இரு தினங்களுக்கு முன்பு போஸ்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் மதன்லால் சௌகான் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு (அக்.26) பதிவு
News October 27, 2025
தேனியில் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது

தேனி கே ஆர் ஆர் நகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக நவம்பர் 2ம் தேதி 14 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு கிரிக்கெட் அணிதேர்வும் காலை 10 மணி நடைபெறும் அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு 16 வயதிற்கு உட்பட்ட அணிதேர்வும் நடைபெறும் மேலும் விவரங்களுக்கு 9842464196 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
News October 27, 2025
தேனி: தபால் துறையில் வேலை…நாளை கடைசி

தேனி மக்களே, இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதாவது ஒர் டிகிரி படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் இருந்தால் போதுமானது. ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் <


