News January 7, 2025

இணைந்தது இந்தோனேஷியா: வலுவாகும் பிரிக்ஸ் கூட்டணி

image

பிரிக்ஸ் அமைப்பில் 10-வது நாடாக இந்தோனேஷியா இணைந்ததாக, அந்த அமைப்பின் தற்போதைய தலைமையான பிரேசில் முறைப்படி அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தெ.ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, யு.ஏ.இ., ஈரான் ஆகிய நாடுகளுடன், தெ.கிழக்கு ஆசியாவின் பெரிய பொருளாதாரமான இந்தோனேஷியா இணைவது பிரிக்ஸை வலுப்படுத்தும். பிரிக்ஸ், தற்போது உலக மக்கள்தொகையில் 40%, பொருளாதாரத்தில் 25% பங்களிப்பை கொண்டுள்ளது.

Similar News

News January 16, 2026

AR ரஹ்மான் மீண்டும் இந்து மதத்திற்கு மாற வேண்டும்: VHP

image

வாய்ப்புகளை பெற, மீண்டும் இந்து மதத்திற்கு திரும்புங்கள் என AR ரஹ்மானுக்கு VHP தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் அறிவுறுத்தியது சர்ச்சையாகியுள்ளது. வகுப்புவாத சிந்தைகளால் கடந்த 8 ஆண்டுகளாக பாலிவுட்டில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக AR ரகுமான் பேசியிருந்தார். அதற்கு பதிலடியாக, ஒட்டுமொத்த திரையுலகையும் ரஹ்மான் அவதூறு செய்கிறார். இது ஒரு கலைஞருக்கு அழகல்ல என பன்சால் விமர்சித்துள்ளார்.

News January 16, 2026

விடுமுறை.. மாணவர்களுக்கு இனிப்பான செய்தி

image

பொங்கல் விடுமுறை முடிந்து வரும் நிலையில், சொந்த ஊருக்கு சென்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் & பொதுமக்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். இந்நிலையில், நாளை சென்னைக்கு திரும்புவதற்கு ஏதுவாக 3,507 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது. பிற நகரங்களுக்கு 2,060 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. உடனடியாக இங்கே <>கிளிக்<<>> செய்து டிக்கெட் புக் செய்யுங்கள்.

News January 16, 2026

இது ரோஹித்துக்கு செய்த அவமரியாதை: மனோஜ் திவாரி

image

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நிலையிலும், ரோஹித் கேப்டன்சியில் இருந்து நீக்கியதற்கு பின்னணியில் பயிற்சியாளர் கம்பீர் இருந்திருக்கலாம் என்று மனோஜ் திவாரி சந்தேகம் தெரிவித்துள்ளார். ரோஹித் போன்ற ஒரு ஜாம்பவானை ஓரங்கட்டுவது விளையாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும் ODI கேப்டன்சியில் இருந்து நீக்கியது ரோஹித்துக்கு செய்த அவமரியாதை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

error: Content is protected !!