News March 25, 2024

கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் வேட்பு மனு தாக்கல்

image

கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஜே பி பிரகாஷ் இன்று (மார்ச்.25) அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி  முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியான தேமுதிகவினர் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News February 5, 2026

கிருஷ்ணகிரியில் உதவியவருக்கு அடி உதை!

image

மிட்டப்பள்ளியை சேர்ந்த பலராமன் என்பவர் நேற்று (பிப்.3) மாலை ஊத்தங்கரை சாலையில் மது போதையில் விழுந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஜலபதி பலராமனை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த பலராமனனின் மகன்கள் திலிப் (21), தீபன் (23), அஜித் (25) ஆகியோர் ஜலபதியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 5, 2026

கிருஷ்ணகிரி: தூக்கி வீசப்பட்டு இருவர் பலி!

image

தேன்கனிக்கோட்டை அருகே பெரியதோகரையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரகள் ராமாச்சாரி (36), முனிராஜ் (37). கடந்த பிப்.3-ம் தேதி இரவு இருவரும் பைக்கில் தேன்கனிக்கோட்டையில் இருந்து தளி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலை ஓரம் நின்ற லாரி மீது பைக் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். தேன்கனிக்கோட்டை போலீசார் லாரி டிரைவர் உபேந்திரகுமாரை தேடி வருகின்றனர்.

News February 5, 2026

கிருஷ்ணகிரி: கழுத்தை நெரித்து கொன்ற கொடூர மனைவி!

image

ஒசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த தம்பதி பார்த்திபன் (32), அம்சவள்ளி (26). கடந்த பிப்.3-ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அம்சவள்ளி தனது இளைய மகனின் கண்முன்னே கணவரைக் அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் கணவன் தற்கொலை செய்ததாக நாடகமாடினார். உடம்பில் தற்கொலைக்கான காயம் இல்லாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதில் அம்சவள்ளி கணவரை கொன்றது தெரிய வந்தது.

error: Content is protected !!