News January 7, 2025

ஏஜென்சி மூலம் டார்ச்சர் செய்த வங்கிக்கு அபராதம்

image

நாமக்கல்லை சேர்ந்த அனுபிரசாத் என்பவர், கடந்த 2007ல் IOB வங்கியில் ரூ.2.57 லட்சம் கல்விக்கடன் வாங்கியுள்ளார். உரிய காலத்தில் பணம் செலுத்த முடியாததால், கோர்ட் மூலம் ஒரே தவணையில் கட்டி முடித்துள்ளார். ஆனால், இன்னும் ரூ.7 லட்சம் கட்ட வேண்டும் என தனியார் ஏஜென்சி மூலம் வங்கி மிரட்டல் விடுத்துள்ளது. அதனால், நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டை அவர் நாட, ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க IOBக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று நவம்பர்-11ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.75 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டையின் விலை ரூ.5.70 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை தேவை அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.

News November 11, 2025

எம்.பி ராஜேஷ்குமார் நாளை பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த விபரம்

image

நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் நாளை (12-11-2025) பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்கள்; காலை 8:30 மணி முதல் காலை 11 மணி வரை வெண்ணந்தூர் பகுதிகளில் தார் சாலை அமைத்தல், அலுவலக கட்டிட திறப்பு விழா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், புதிய நிழற்கூடம் அமைத்தல், பட்டா வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

News November 11, 2025

உரம் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை!

image

நாமக்கல் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். விற்பனை முனைய கருவி மூலம் உரங்களை விற்பனை செய்ய வேண்டும், உர உரிமம் புதுப்பிக்காமலோ எம்ஆர்பி-யை விட அதிக விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு உரங்கள் பயன்படுத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

error: Content is protected !!