News January 7, 2025
பும்ராவின் injury: தவிக்கும் இந்திய அணி

முதுகு தசைப்பிடிப்பால் அவதிப்படும் பும்ரா, சாம்பியன்ஸ் ட்ராபி தொடரையும் மிஸ் பண்ணலாம் என தகவல் வெளியாகி வருகின்றது. அவர் அணியில் இடம்பெற்றாலும் விளையாடுவது அவரின் உடல் நலத்தை பொறுத்தே அமையும் என NDTV sports செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமான தொடருக்கு முன்பாக பும்ராவின் இந்த நிலை அணிக்கு பெரிய பின்னடைவு தான். இந்த செய்தி ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
Similar News
News January 19, 2026
மாமல்லன் நீர்த்தேக்கத்தால் 170 மில்லியன் லிட்டர் நீர்: CM

திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த உண்மை தெரிந்தும் திமுக குறித்து பலர் பொய் சொல்வதாக CM ஸ்டாலின் பேசியுள்ளார். திருப்போரூரில் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டி பேசிய அவர், சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாமல்லன் நீர்த்தேக்கம் அமைய உள்ளது என்றும், இதனால் நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் நீரை மக்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
ரோஹித்தை மீண்டும் கேப்டனாக்குங்க..

NZ-க்கு எதிரான ODI தொடர் தோல்விக்கு பிறகு பயிற்சியாளர் கம்பீர் & கேப்டன் கில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், 2027 ODI WC-க்கு முன் ரோஹித்தை கேப்டனாக்க வேண்டும் என Ex வீரர் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ODI அணியில் கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்தும் BCCI பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். நீங்க என்ன சொல்றீங்க?
News January 19, 2026
உழவர்களின் முதல் எதிரி திமுக: அன்புமணி

கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை கிலோவுக்கு ₹20 உயர்த்த வேண்டும் என போராடிய ஈசன் முருகேசன் உள்ளிட்டோரை போலீஸ் கைது செய்ததற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். பெரு நிறுவனங்களின் தூண்டுதலின் பேரில் கைது நடவடிக்கையை மேற்கொண்டு, உழவர்களின் முதல் எதிரியாக DMK அரசு உருவெடுத்துள்ளதாக அவர் X-ல் சாடியுள்ளார். உழவர்களின் கோரிக்கையை பெரு நிறுவனங்கள் ஏற்பதை அரசு உறுதிசெய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.


