News January 7, 2025
தேர்தல் நடத்தை விதி அமல்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்துள்ளன. இதனால், அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர், அரசியல்
கட்சித்தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பரிசு மற்றும் பணம் கொடுத்தால் புகார் கூறவும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு சென்றால், பறிமுதல் செய்யப்படும்.
Similar News
News January 26, 2026
கிரெடிட் கார்டு பில் கட்டலனா கைது செய்வார்களா?

கிரெடிட் கார்டு பில்லை நீண்டகாலமாக கட்டவில்லை என்றால், அது முதலில் சிவில் குற்றமே, கைது செய்ய முடியாது. வங்கி தரப்பில் முதலில் மெசேஜ், மெயில் அல்லது நேரடியாக ஆள்களை அனுப்பி விசாரிக்கும். நீண்டகாலமாக எதற்கும் பதிலளிக்கவில்லை என்றால், வங்கி சிவில் கோர்ட்டுக்கு செல்லலாம். விசாரணையில் வேண்டுமென்றே பில்லை கட்டவில்லை என நிரூபிக்கப்பட்டால், அது குற்ற சம்பவமாக மாறும். அப்போது சிறை தண்டனை வழங்கப்படலாம்.
News January 26, 2026
PM மோடியும்.. குடியரசு தின டர்பனும்!

ஒவ்வொரு ஆண்டும் PM மோடி, குடியரசு தின விழாவில் பங்கேற்கும் போது, அவரின் தலைப்பாகை(டர்பன்) தனி கவனம் பெறுகிறது. ராஜஸ்தானி தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள அவர், அதன் நிறத்தை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் மாற்றுகிறார். 5 மீட்டர் துணியில் தயாரிக்கப்படும் இந்த தலைப்பாகை சுயமரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது. 2015- 2026 வரை PM மோடி அணிந்த தலைப்பாகைகளை மேலே அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம்.
News January 26, 2026
BREAKING: நடிகர் ரஜினி சொன்ன அரசியல் திருப்பம்

நடிகர் ரஜினியுடன் நேற்று நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடல் குறித்த கவிஞர் வைரமுத்துவின் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வடநாட்டு அரசியல் குறித்தும் அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு திருப்பம் குறித்தும் ரஜினி சொன்னபொழுது தான் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் நிகழ்கால வெப்ப அரசியல் குறித்தும் விவாதித்ததாகவும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.


