News January 7, 2025

குமரி மாவட்டத்தில் 28,882 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் 15 லட்சத்து 84 ஆயிரத்து 362 வாக்காளர்கள் உள்ளனர்.வாக்காளர் பட்டியலில் இருந்து 9,102 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, 28,882 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 12,808 பேர். பெண் வாக்காளர்கள் 17,072 பேர். இதர வாக்காளர்கள் 2 பேர்.

Similar News

News February 3, 2026

குமரி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Grievance Redressal, கன்னியாகுமரி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

News February 3, 2026

குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 3, 2026

குமரி: குளத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு..!

image

விளவங்கோடு, மடிச்சல் கிராமத்தில் உள்ள கீரங்குளத்தில் நேற்று மதியம் 2 மணி அளவில், ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறை (ம) தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் இறந்த நபர் காட்டுவிளை குழித்துறை பகுதியில் வாடகைக்கு வசித்து வந்த ஜெகன் என தெரியவந்துள்ளது.

error: Content is protected !!