News January 7, 2025

விருதுநகரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் லதா தலைமையில் நடைபெற்றது. காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விருதுநகர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மின் தொடர்பான புகார்களை மேற்பார்வை பொறியாளரிடம் மனுக்களாக தெரிவித்தனர்.

Similar News

News February 6, 2026

BREAKING விருதுநகர் எம்.பி பதிவால் கூட்டணியில் மோதல்?

image

புதுச்சேரியில் கூட்டணிக்கு திமுக தான் தலைமை தாங்க வேண்டும் என்று ஜெகத்ரட்சகனிடம் திமுக நிர்வாகிகள் வலியுறுத்துவதாக தகவல் வெளியானது. இது காங்கிரஸ் கட்சியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கூட்டணியில் 8% ஓட்டுகளை வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா? இல்லை 26% வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா? என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் X தளத்தில் பதிவிட்டுள்ளது கூட்டணியில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

News February 6, 2026

ஸ்ரீவி: தனியார் பள்ளியில் முகமூடி திருடர்கள் கைவரிசை

image

ஶ்ரீவி – சிவகாசி சாலையில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு கண்காணிப்பு கேமரா மற்றும் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பார்த்த போது அலுவலகத்தில் இருந்த ரூ.70,000 திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்ததில் முகமூடி அணிந்த இருவர் திருடிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அசிரியர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

News February 6, 2026

விருதுநகர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!