News January 7, 2025
கே.வி.தங்கபாலுவுக்கு காமராஜர் விருது அறிவிப்பு

2024ம் ஆண்டுக்கான காமராஜர் விருது தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவரது 50 ஆண்டுகால பொதுவாழ்வு சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதோடு, விருதுத்தொகையாக ₹2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஜன.15ல் சென்னையில் நடைபெறும் விழாவில் CM ஸ்டாலின் அவருக்கு இந்த விருதினை வழங்க உள்ளார்.
Similar News
News January 21, 2026
டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

டாஸ்மாக் கடைகள் ஆண்டுக்கு 8 நாள்கள் மட்டுமே இயங்காது. ஆனால், அடுத்த 10 நாள்களில் மட்டும் 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது, ஜன.26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாள்களில் தமிழகத்தில் மது விற்பனை கிடையாது. இவ்விரு நாள்களிலும் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News January 21, 2026
உங்கள் குழந்தைக்கு இந்த பிரச்னை இருக்கா?

தற்போது பெண் குழந்தைகள் சீக்கிரமே பூப்படைவதால் அவர்களுக்கு PCOS போன்ற பிரச்னைகள் வருமோ என பெற்றோர் வருந்துகின்றனர். ஆனால் பூப்படைந்த முதல் 2 வருடங்களில் இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் குறைவு என டாக்டர்கள் சொல்கின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகும்/, சீரற்ற மாதவிடாய், குறைவான ரத்தப்போக்கு, முகத்தில் அதீத முடி வளர்ச்சி போன்ற அறிகுறிகள் இருந்தால் மகப்பேறு டாக்டரை அணுகுங்கள். விழிப்புணர்வுக்காக, SHARE.
News January 21, 2026
‘நான் சாகப்போறேன்.. அப்பா என்னை மன்னிச்சிரு’

‘என்னை மன்னித்து விடுங்கள்… ஐ லவ் யூ அம்மா, அப்பா’. நாசிக்கில் மாற்றுத் திறனாளி பெண்ணான திக்ஷா(21), தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கையில் எழுதிய வாசகம் இது. தங்களின் எதிர்கால நம்பிக்கையாக இருந்த மகள் இப்படி செய்துவிட்டாளே என பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர். வீட்டில் தூக்கிட்டு கொண்ட திக்ஷாவின் சோக முடிவுக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என உணருங்கள்.


