News March 25, 2024

வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News

News October 27, 2025

சென்னை: ரயில் சேவை ரத்து!

image

மோன்தா புயல் ஆந்திராவில் கரையை கடக்கவுள்ளது. இதனையொட்டி முன்னெச்சரிக்கையாக சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (அக்.27) இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினம்-சென்னை சென்ட்ரல் ரயில் (22869) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாளை (அக்.28) காலை 10 மணிக்கு சென்ட்ரல்-விசாகப்பட்டினம் புறப்பட இருந்த ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News October 27, 2025

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை: பிரதீப் ஜான்

image

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது X தளத்தில் மோன்தா புயல் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். அதில், மோன்தா புயல் காரணமாக சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவித்த அவர், சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார். தென் சென்னையுடன் ஒப்பிடும்போது, வட சென்னையில் 50-70 மிமீ வரை மழை பெய்யும் எனவும், தென் சென்னையில் 10-50 மிமீ மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

News October 27, 2025

சென்னை: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

சென்னை மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!