News January 7, 2025

HMPV வைரஸ் யாரை அதிகம் தாக்கும், அறிகுறிகள் என்ன?

image

வேகமாக பரவி வரும் சீனாவின் HMPV வைரஸானது 14 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், நுரையீரல், சுவாசக்கோளாறு உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது. இருமல், சளி, மூக்கில் நீர் வடிதல், நடக்கும் போது தலைச் சுற்றல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி இல்லாத போதிலும் காய்ச்சல், வலி நிவாரணி மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

Similar News

News February 23, 2026

பங்குச்சந்தைகள் கிடுகிடு உயர்வு.. ஆரம்பமே அட்டகாசம்!

image

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 551 புள்ளிகள் உயர்ந்து 83,366 புள்ளிகளிலும், நிஃப்டி 167 புள்ளிகள் உயர்ந்து 25,738 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக Axis Bank, HDFC Life, SBI Life Insura, Kotak Mahindra போன்ற வங்கி சார்ந்த நிறுவனங்களில் பங்குகள் 3% வரை ஏற்றம் கண்டுள்ளன.

News February 23, 2026

துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் பிரேமலதா: EPS

image

திமுக கூட்டணி சுயநலம் நிறைந்தது; அதனால்தான் காங்கிரஸ் முன்கூட்டியே ஆட்சியில் பங்கு கேட்கிறது என EPS தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் புதிதாக சேர்ந்த ஒரு கட்சியின் பெண் தலைவர் ஒரு மாசத்துக்கு முன்னாடி நடந்த மாநாட்டில் DCM பதவி வேண்டும் என்றார் என பிரேமலதாவின் பெயரை கூறாமல் விமர்சித்தார். அதேவேளையில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக NDA கூட்டணி அமைந்துள்ளது என பேசியுள்ளார்.

News February 23, 2026

விண்வெளித்துறையில் சாதிக்க வேண்டுமா?

image

விண்வெளித்துறையில் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்காக ‘YUVIKA 2026’ என்ற திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தவுள்ளது. இதன் மூலம் விண்வெளி தொழில்நுட்பம் குறித்த அடிப்படை அறிவை மாணவர்கள் பெற முடியும். இதற்கு ஜனவரி 1, 2026 நிலவரப்படி 9-ம் வகுப்பு படிப்பவர்கள் தகுதியுடையவர்கள். பிப். 27-மார்ச் 31-ம் தேதி வரை https://www.isro.gov.in/ தளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். மே 11-22 வரை இலவச பயிற்சி வழங்கப்படும்.

error: Content is protected !!