News March 25, 2024

1950 -ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்

image

18 ஆவது நாடாளுமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மூன்று மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து புகார்கள், சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு பொதுமக்கள் 1950 வை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும்,
மாநகராட்சி உதவி எண் 1913 யையும் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News October 27, 2025

சென்னை: மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

image

சென்னை, நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி அக்.27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 27, 2025

சென்னை: ரயில் சேவை ரத்து!

image

மோன்தா புயல் ஆந்திராவில் கரையை கடக்கவுள்ளது. இதனையொட்டி முன்னெச்சரிக்கையாக சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (அக்.27) இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினம்-சென்னை சென்ட்ரல் ரயில் (22869) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாளை (அக்.28) காலை 10 மணிக்கு சென்ட்ரல்-விசாகப்பட்டினம் புறப்பட இருந்த ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News October 27, 2025

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை: பிரதீப் ஜான்

image

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது X தளத்தில் மோன்தா புயல் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். அதில், மோன்தா புயல் காரணமாக சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவித்த அவர், சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார். தென் சென்னையுடன் ஒப்பிடும்போது, வட சென்னையில் 50-70 மிமீ வரை மழை பெய்யும் எனவும், தென் சென்னையில் 10-50 மிமீ மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!