News January 7, 2025
ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்

பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை நியமிப்பதில் மாநில ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது UGC. முன்னதாக ஆளுநரால் நியமிக்கப்படும் ஒருவர், UGC பரிந்துரைக்கும் ஒருவர், பல்கலைக்கழக உறுப்பினர் என துணை வேந்தர் தேர்வுக்குழுவில் மூன்று பேர் இருப்பார்கள். இப்போது, அனைத்து உறுப்பினர்களையும் ஆளுநரே தேர்வு செய்யலாம் என்று UGC தெரிவித்துள்ளது.
Similar News
News February 7, 2026
‘₹’ குறியீடு எப்படி உருவானது தெரியுமா?

ரூபாயின் குறியீடு எப்படி உருவானது என தெரியுமா? தேவநாகரி எழுத்து “र” (ra) மற்றும் நேர்கோடு இல்லாத லத்தீன் எழுத்து ‘R’ ஆகியவற்றின் கலவை இது. தேவநாகரி என்பது சமஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி போன்ற இந்திய மொழிகளை எழுதப் பயன்படுத்தப்படும் எழுத்து முறை. இந்த குறியீடு ஜூலை 15, 2010-ல் இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை திருச்சியை சேர்ந்த உதய குமார் என்பவர் வடிவமைத்தார். SHARE.
News February 7, 2026
பார்லி.,யில் பாஜகவினர் கத்திட்டே இருக்காங்க: TR பாலு

நாடாளுமன்றம் நடக்கிறது என சொன்னாலே சிரிப்பாக வருகிறது என MP டி.ஆர்.பாலு கூறியுள்ளார். நாடாளுமன்றம் முறையாக நடப்பதில்லை என்ற அவர், ஒரு கருத்தை முன்வைக்க எழும்போதே, பாஜகவினர் கத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தியாவின் 140 கோடி பேருக்கும் தலைகுனிவு என மக்கள் நினைப்பதாகவும் பேசியுள்ளார்.
News February 7, 2026
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: புதிய கருத்து கணிப்பு

TN தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் VOTE VIBE மற்றும் CHANAKYA தனித்தனியாக நடத்திய சர்வே முடிவுகளை CNN NEWS 18 வெளியிட்டுள்ளது. அதில், VOTE VIBE நிறுவனத்தின் சர்வேயின்படி, TN அடுத்த CM யார் என்ற கேள்விக்கு ஸ்டாலின் – 33.3%, EPS-29.8%, விஜய்-23.2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம், ஜனவரியில் CHANAKYA நடத்திய சர்வேயில் EPS – 33%, ஸ்டாலின் – 37%, விஜய்-24% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


