News January 7, 2025

எப்படி பரவுகிறது HMPV வைரஸ்?

image

HMPV வைரஸ் நாட்டில் பரபரப்பை உண்டாக்கி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர் தும்மும் போதோ அல்லது இருமும் போதோ வெளிவரும் நீர்த்துளிகள் மூலமாக, பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிப் பழகுவதன் மூலமாக பிறருக்கு பரவுகிறது. அதிகமாக எதிர்ப்புசக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களையே இது தாக்குகிறது. உடலில் நுழைந்த 3-6 நாள்கள் கழித்தே அறிகுறிகள் (சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல்) தெரிகிறது.

Similar News

News January 19, 2026

தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார்

image

நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அன்று பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

News January 19, 2026

அரசியலை விட்டு விலக முடிவா? ரோஜா விளக்கம்

image

பிரபல நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா அரசியலில் இருந்து விலகுவதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு பதிலளித்துள்ள அவர், தான் தற்போது சினிமா, டி.வி. நிகழ்ச்சிகளில் அதிகமாக வருவதால், அரசியலை விட்டு விலகி விடுவேன் என்று நினைக்கிறார்கள். நான் ஒருபோதும் பயந்து ஓடவோ, விலகவோ மாட்டேன். நான் ஒரு பெண் என்பதால் விமர்சனம் செய்கிறார்கள் என்று கூறினார்.

News January 19, 2026

விஜய்யுடன் கூட்டணியை விரும்பாத காங்., தலைமை!

image

தவெக உடன் கூட்டணி இல்லை என்பதை காங்கிரஸ் தலைமை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து பயணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் – தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணியில் தொடர விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!