News January 7, 2025
ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த நபர் பலி

கடந்த 3ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லாவரம் அடுத்த திரிசூலம் வைகை தெருவைச் சேர்ந்த பாபு என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 70% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தச் சூழலில், சிகிச்சை பலனின்றி பாபு நேற்று (ஜன.6) உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 23, 2026
செங்கல்பட்டில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் இன்று ஜன (22 ) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது
News January 22, 2026
பிரதமரின் பயண திட்ட விவரங்கள்

பிற்பகல் 2:15 திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் வருகிறார். பிற்பகல் 2:50 ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுராந்தகம் எலி பேடில் தரையிறங்க உள்ளார். பிற்பகல் 3 மதுராந்தகம் கூட்டத்தில் பங்கேற்கிறார் 4:15 வரை கூட்டம் நடைபெறும். பிற்பகல் 4:20 புதுக்கோட்டை இடத்திலிருந்து சாலை வழியாக எலி பேட் இடத்திற்குச் சென்று சென்னை புறப்படுகிறார்.
News January 22, 2026
தாம்பரம்: பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை…

தாம்பரம் அருகே அரசு பேருந்தில் பயணித்த 17 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் கொடுத்த சென்னை ஜாஃபர்கான் பேட்டையை சேர்ந்த கீர்த்திவாசன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி கத்தி கூச்சலிட்டதால் சக பயணிகள் இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து கீர்த்திவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி செய்தனர்.


