News January 7, 2025

ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண்

image

குஜராத் மாநிலம் கஞ்ச் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம், பேரிடர் மீட்பு படையினர் அப்பெண்ணை மீட்க போராடி வருகின்றனர். தற்போது அவருக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், ராஜஸ்தானில் 700அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 9 நாட்கள் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டும், உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 14, 2025

பாஜக அதிகாரத்தை பறிக்கிறது: விஜய்

image

தென் இந்தியாவின் அதிகாரத்தை பாஜக பறிக்கிறது என தேர்தல் பரப்புரையில் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். அரியலூர் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வாக்கு திருட்டு, தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களை கையிலெடுத்தார். பாஜக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவதாகவும், தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் இந்தியாவிற்கு துரோகம் செய்கிறது எனவும் அவர் சாடினார்.

News September 14, 2025

ராசி பலன்கள் (14.09.2025)

image

➤மேஷம் – புகழ் ➤ரிஷபம் – கீர்த்தி ➤மிதுனம் – சுபம் ➤கடகம் – நட்பு ➤சிம்மம் – அன்பு ➤கன்னி – சாந்தம் ➤துலாம் – வெற்றி ➤விருச்சிகம் – வரவு ➤தனுசு – சுகம் ➤மகரம் – கோபம் ➤கும்பம் – பாராட்டு ➤மீனம் – திறமை.

News September 14, 2025

இளையராஜாவின் ரத்தத்தில் இசை ஊறியுள்ளது: ரஜினி

image

இளையராஜா என்ற எளிய மனிதனுக்கு பிரமாண்ட விழாவை தமிழக அரசு நடத்தியுள்ளதாக ரஜினி தெரிவித்தார். தன் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா என தெரிவித்த அவர், இளையராஜாவின் நாடி, நரம்பு, ரத்தத்தில் இசை ஊறியுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். பல சோகங்களை வாழ்வில் கண்ட இளையராஜா, SPB மறைவுக்கு சிந்திய கண்ணீரை யாருக்கும் சிந்தவில்லை என ரஜினி தெரிவித்தார்.

error: Content is protected !!