News January 7, 2025

பான் கார்டு இல்லாமல் CIBIL ஸ்கோர் பார்ப்பது எப்படி?

image

CIBIL ஸ்கோரை பான் கார்டு இல்லாமலே ஆன்லைனில் பார்க்கலாம். சிபில் இணையதளத்தில் ‘Personal CIBIL Score’ஐ தேர்வு செய்யவும். ‘Get your free CIBIL score’ஐ கிளிக் செய்யவும். சிபில் இணையதளத்தில் கணக்கு இல்லை என்றால் பாஸ்போர்ட், Voter ID ஏதேனும் ஒன்றை கொடுத்து அக்கவுண்டை ஆரம்பிக்கலாம். மற்ற விவரங்களை நிரப்பி Submit செய்தால் கணக்கு உருவாகிவிடும். பின்னர் சிபில் இணையதளத்தில் ஸ்கோரை செக் செய்யலாம். SHARE IT.

Similar News

News September 14, 2025

பாஜக அதிகாரத்தை பறிக்கிறது: விஜய்

image

தென் இந்தியாவின் அதிகாரத்தை பாஜக பறிக்கிறது என தேர்தல் பரப்புரையில் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். அரியலூர் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வாக்கு திருட்டு, தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களை கையிலெடுத்தார். பாஜக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவதாகவும், தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் இந்தியாவிற்கு துரோகம் செய்கிறது எனவும் அவர் சாடினார்.

News September 14, 2025

ராசி பலன்கள் (14.09.2025)

image

➤மேஷம் – புகழ் ➤ரிஷபம் – கீர்த்தி ➤மிதுனம் – சுபம் ➤கடகம் – நட்பு ➤சிம்மம் – அன்பு ➤கன்னி – சாந்தம் ➤துலாம் – வெற்றி ➤விருச்சிகம் – வரவு ➤தனுசு – சுகம் ➤மகரம் – கோபம் ➤கும்பம் – பாராட்டு ➤மீனம் – திறமை.

News September 14, 2025

இளையராஜாவின் ரத்தத்தில் இசை ஊறியுள்ளது: ரஜினி

image

இளையராஜா என்ற எளிய மனிதனுக்கு பிரமாண்ட விழாவை தமிழக அரசு நடத்தியுள்ளதாக ரஜினி தெரிவித்தார். தன் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா என தெரிவித்த அவர், இளையராஜாவின் நாடி, நரம்பு, ரத்தத்தில் இசை ஊறியுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். பல சோகங்களை வாழ்வில் கண்ட இளையராஜா, SPB மறைவுக்கு சிந்திய கண்ணீரை யாருக்கும் சிந்தவில்லை என ரஜினி தெரிவித்தார்.

error: Content is protected !!