News March 25, 2024
கடலூரில் பாமக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் பாமக மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், ஜெகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது நான் கண்டிப்பாக ஜெயிப்பேன் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என கூறினார்.
Similar News
News September 19, 2025
கடலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 19, 2025
கடலூர் அருகே இளைஞர் கொலை ?

பண்ருட்டி அருகே கட்டியாம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (30). கட்டிட தொழிலாளியான, இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள குளத்தில் ரத்த காயங்களுடன் கார்த்திக் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து உடலை கைப்பற்றிய பண்ருட்டி போலீசார் இளைஞர் கொலை செய்யப்பட்டாரா? எனும் கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
News September 19, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.18) இரவு 10 மணி முதல் இன்று (செப்.19) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.