News January 7, 2025
வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண்கள் தான் அதிகம்

தேர்தல் ஆணையம் சார்பில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார். அதன்படி 9,55,356 ஆண்கள், 10,21,871 பெண்கள், 192 திருநங்கைகள் என மொத்தம் 19,77,419 வாக்காளர்கள் உள்ளனர்.
Similar News
News February 3, 2026
ஈரோடு: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.<
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!
News February 3, 2026
ஈரோடு: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 3, 2026
ஈரோடு கலெக்டர் அதிரடி உத்தரவு!

ஈரோடு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தோட்டத்தில் பனை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்தப் பனை மரங்கள் பல்வேறு மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. பல்வேறு கலைப் பொருட்கள், பதநீர் போன்றவற்றிற்காக மக்கள் பலர் இதனை சார்ந்து வாழ்கின்றனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் பனை மரங்கள் வெட்ட ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி கடிதம் இல்லாமல் வெட்டக்கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர் சி கந்தசாமி தெரிவித்துள்ளார்


